TNPL 2023 : டி.என்.பி.எல் ஏலத்தில் இளம் வீரர் சாய் சுதர்சன் அசத்தல்.!! போட்டி போட்ட அணிகள் ..!!

தமிழக கிரிக்கெட் வீரர்கள் திறமையை இந்திய அளவிலும் உலக அளவிலும் எடுத்து செல்லும் விதத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் முக்கிய கிரிக்கெட் தொடராக டி.என்.பி.எல் உள்ளது, இந்த 2023 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எல் ஏலம் நேற்று முதல் மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது, சர்வ்தேச தமிழக வீரர்களை விட உள்ளூர் வீரர்களை போட்டி போட்டு கொண்டு அணிகள் வாங்கி வருகிறார்கள்.
இந்த டி.என்.பி.எல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று உள்ள நிலையில் தமிழக அணியின் முன்னணி இடது கை இளம் வீரர் சாய் சுதர்சனை வாங்க அணிகளுக்கு இடையில் மிகுந்த போட்டி நிலவியது, இறுதியில் லைக்கா கோவை கிங்ஸ் அணி 21.6 லட்சத்திற்கு சாய் சுதர்சனை வாங்கியது, தற்போதைய நிலை வரை டி.என்.பி.எல் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு போன வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.
இந்த ஏலத்தில் இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் உள்ளூர் வீரர் சாய் சுதர்சன் தான் அதிக விலைக்கு சென்றுள்ளார். இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு சாய் சுதர்சன் வாங்க பட்ட நிலையில் , அதை விட டி.என்.பி.எல் தொடர் ஏலத்தில் அதிக விலைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி உள்ள சாய் சுதர்சன் மொத்தமாக 145 ரன்கள் பெற்றுள்ளார், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 65 ரன்கள் பெற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தமிழக அணியில் முன்னணி இளம் வீரராக சாய் சுதர்சன் உள்ளதால் டி.என்.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.