Representative Image.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இன்று நடந்த பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. அடுத்தது பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை 2022ஐ இந்திய அணி கைப்பற்றியது.
]பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை கோப்பையை டீம் இந்தியா வெல்வது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன், 2012 மற்றும் 2017 இல் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.