Representative Image.
T20 World Cup 2022 : கடந்த வெள்ளிக்கிழமை மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை 2022 போட்டி இரு அணிகளுக்கும் ஒரு நாக் அவுட் போட்டியாகவே கருதப்பட்டது. ஆனால் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. இதன் விளைவாக, குரூப் 1 'இல் அரையிறுதிக்கு தகுதி பெற, அயர்லாந்து மற்றும் ஆப்கனைத் தவிர அனைத்து அணிகளுமே வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலைமையின்படி, குரூப் 1 இல் ஆஸ்திரேலியா மிக மோசமான நிகர ரன் ரேட்டைக் கொண்டுள்ளது, தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அவர்கள் பெற்ற பயங்கரமான தோல்விக்கு பிறகு 3 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 1 வெற்றி, 1 தோல்வியை பெற்ற நிலையில், ஒரு போட்டி மழையால் ரத்தானது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளின் நிகர ரன் ரேட் முறையே +4.450 மற்றும் +0.239. எனினும் புள்ளிகள் அடிப்படையில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தலா 5 புள்ளிகளுடன் உள்ளன. இந்த பட்டியலில் இலங்கை 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
ஆப்கான் 3 புள்ளிகளுடனும் அயர்லாந்து 2 புள்ளிகளுடனும் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இதற்கிடையே குழு 1'இல் அனைத்து அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளன.
இதில் நியூசிலாந்து அயர்லாந்து அணியுடனும், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணியுடனும் அடுத்த போட்டியில் மோத உள்ள நிலையில், இங்கிலாந்து இலங்கை அணியுடன் மோத உள்ளது. இப்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிரணியை எளிதாக வீழ்த்தி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் ஆஸ்திரேலியாவின் நிகர ரன் ரேட் மிகவும் குறைவாக இருப்பதால், இலங்கையை இங்கிலாந்து வீழ்த்தினால், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கதி அதோகதி தான். இருப்பினும் ஏதேனும் மேஜிக் நடந்து நியூசிலாந்து அயர்லாந்திடமோ அல்லது ஆஸ்திரேலியா ஆப்கானிடமோ தோல்வியடைந்து, இங்கிலாந்து இலங்கையிடம் தோல்வியடைந்தால், இலங்கைக்கும் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இதனால் குழு 1'இல் இருந்து அரையிறுதி செல்லும் அணி எது என்பது தற்போதுவரை கேள்விக்குறிதான்.