Representative Image.
T20 World Cup 2022 : ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 சூப்பர் 12 சுற்றில் நவம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா ஜிம்பாப்வேயுடன் மோதும் நிலையில், இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், தான் ஒரு ஜிம்பாப்வே நபரை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து, பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவை ஆபத்தில் தள்ளி ஒரு வாரம் கழித்த நிலையில், பாகிஸ்தான் நடிகை இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று வங்காளதேசத்திற்கு எதிரான இந்தியாவின் போட்டியின் போது இந்தியா ஆட்டத்தில் தோற்றுவிட வேண்டும் என்றுட்வீட் செய்து வந்தார்.
இந்நிலையில், அவர் இன்று வெளியிட்ட ட்வீட்டில், "அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால் நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன்." என்றார். இந்த ட்வீட் பல லைக்குகளையும் ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.
இந்த ட்வீட் பல எதிர்வினைகளையும் பெற்று வருகிறது. சில நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர் மற்றும் அவர் இதற்கு முன்பு, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தனது பெயரை நரேந்திர மோடி என மாற்றிக் கொள்வதாக கூறியிருந்த பதிவையும் பகிர்ந்து நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.