அரையிறுதி, இறுதி போட்டிகளுக்கும் அப்படி நடந்துடக் கூடாதே.. பீதியில் ஐசிசி செய்த காரியம்!!

ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2022 இன் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான புதிய விதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரண்டு இன்னிங்ஸிலும் குறைந்தபட்சம் 10 ஓவர்களாவது வேண்டும் விளையாட வேண்டும் என்று கூறுகிறது.
அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மழை ஆட்டத்தை பாதித்தால், ஆட்டம் 10-ஓவர்களுக்கு குறைவாக இருந்தால், புதிய விதியின்படி, போட்டியில் எந்த முடிவும் இருக்காது. ஆஸ்திரேலிய வானிலை இந்த சீசனில் அணிகளுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் நாக்-அவுட் நிலை போட்டிகளின் போது ஒரு ரிசர்வ் நாள் இருக்கும்.
இரு குழுக்களின் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைய கடுமையாகப் போராடிய நிலையில் குரூப் 1'இல் நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. குழு 2 இல், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அடுத்த கட்டத்திற்கான முன்னணி போட்டியாளர்களாக உள்ளன, ஆனால் பாகிஸ்தான் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளும் சிறிதளவு உள்ளன.
இந்நிலையில் சூப்பர் 12 சுற்றில் மழையால் போட்டிகள் கைவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் இதேபோல் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக புதிய விதிகளை கொண்டுவந்துள்ளன.
இதன் படி மழையால் ஆட்டத்தில் சிக்கல் ஏற்பட்டாலும், இரு அணிகளும் தலா 10 ஓவர்களாவது குறைந்தபட்சம் விளையாட வேண்டும் என்றும், இல்லையெனில் ரிசர்வ் நாளில் மறு போட்டியை நடத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.