Representative Image.
T20 World Cup 2022 IRE vs NZ : கடந்த ஆண்டு துபாயில் ஹாட் ட்ரிக் சாதனையை நிகழ்த்திய கர்டிஸ் கேம்பருக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த இரண்டாவது அயர்லாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜோசுவா லிட்டில் இன்று பெற்றார்.
ஆட்டத்தின் 19வது ஓவரில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (61), ஜேம்ஸ் நீஷம் (0), மிட்செல் சான்ட்னர் (0) ஆகியோரை லிட்டில் அவுட்டாக்கி, 2022 டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது ஹாட்ரிக்கை எடுத்தார். முதல் ஹாட்ரிக்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடிய தமிழர் கார்த்திக் மெய்யப்பன் எடுத்திருந்தது குறிப்ப்பிடத்தக்கது.
லிட்டில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் இன்னிங்ஸை முடித்தார் மற்றும் இப்போது ஒரு காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் 39 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2022'இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பவுலராக ஜோசுவா லிட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.