Representative Image.
T20 World Cup 2022 : நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை சூப்பர் 12 சுற்றோடு உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றியது. இதன் விளைவாக குரூப் 2 இலிருந்து இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இன்று அடிலெய்டில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் நெதர்லாந்து உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அதன் டாப்-ஆர்டரின் கூட்டு முயற்சியால் 4 விக்கெட்டுக்கு 158 ரன்களை எடுத்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக கொலின் அக்கர்மேன் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், டாம் கூப்பர் 19 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மஹராஜ் (2/27) 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலக்கைத் தக்கவைத்து, நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.
தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 25 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்தியா ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் முடிவு எப்படி இருந்தாலும், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே குரூப் 2'இல் அரையிறுதிக்கு தகுதி பெறும் மற்றொரு அணி எது என்பதற்கான பலப்பரீட்சையில் தற்போது வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.