T20 World Cup 2022 Final : பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து.. இரண்டாவது முறையக கோப்பையை கைப்பற்றி அசத்தல்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 13, 2022 & 17:12 [IST]

Share

T20 World Cup 2022 Final : 2022 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோதிய நிலையில், 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித் தள்ளி, இங்கிலாந்து கோப்பையை வென்றது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்களும் பாபர் அசாம் 32 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடினாலும், விக்கெட்டுகளை இடையிடையே இழந்ததால் 19 ஓவர்களில் தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது.  பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்ததோடு, அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.