ind vs aus test 2023 : சூர்யா குமார், ஸ்ரீகர் பரத் இருவருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (பிப்ரவரி 9 ) தொடங்கியது, இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் அறிமுக வீரர்களாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட சூர்யா குமார் யாதவ் மற்றும் ஸ்ரீகர் பரத் இருவரும் களமிறக்க பட்டுள்ளனர்.
இந்த தொடரின் மீது சில நாட்களாக அதிக அளவில் பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்த தொடரை கைப்பற்றி ஆகா வேண்டும் என்று இரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிரடியான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி.
இந்திய அணி சார்பில் காயம் காரணமாக விலகியுள்ள வீரர்கள் ரிஷாப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் பதிலாக எந்த வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யா குமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஸ்ரீகர் பரத் இருவருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியா அணி சார்பில் இளம் பவுலர் டாட் மர்பி முதல் டெஸ்ட் பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளார், இந்திய அணியில் பல விமர்சனங்களுக்கு இடையில் சூர்யா குமார் யாதவுக்கு டெஸ்ட் பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறனை நிரூபிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.
அதே போல் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் அணியில் இடம் பெற இயலாத நிலையில் தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை ஸ்ரீகர் பரத் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் தற்போதைய நிலையில் சிறப்பான தொடக்கத்தை இந்திய அணி அளித்துள்ளது, ஆஸ்திரேலிய அணி மிகவும் முன்னதாகவே 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.