முதல் இந்திய வீரராக சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை..! குவியும் பாராட்டுகள்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 12, 2023 & 10:25 [IST]

Share

இந்திய அணியின் அதிரடி டி20 பேட்ஸ்மேனாக வளம் வரும் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங் மூலம் உலக அளவில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற இடத்தை அண்மையில் பெற்று அசத்தினார்.அதன்பின்  இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூலம்  ஒரு புதிய சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 பந்துகளில் 7-பவுண்டரிகள் 9- சிக்ஸர்கள் உட்பட 112* ரன்கள் அடித்து அரங்கத்தை மிரட்டினார். இந்நிலையில் ஐசிசி டி20 தரவரிசையில் எந்த இந்திய வீரரும் படைக்காத சாதனையை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் அண்மையில் ஐசிசி அறிவித்த சர்வதேச டி20 வீரர்கள் தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சூர்யகுமார், 908 புள்ளிகளை பெற்றார். இதுவரை இந்திய வீரர்கள் யாரும் இதுவரை 900 புள்ளிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் டி20 தரவரிசையில்   முன்னணி வீரர்கள் ஆரோன் பின்ச் (900), விராட் கோலி (897) மற்றும் பாபர் ஆசாம் (896)  ஆகியோர்  பெற்ற புள்ளிகளை கடந்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் 2020ஆம்  ஆண்டு 915 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 டி20 வீரர் என்ற இடத்தை பெற்று  படைத்த சாதனை தான் முதலிடத்தில் உள்ளது.

அடுத்து வரும் போட்டிகளில் சூர்யா குமார் யாதவ் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால்  டேவிட் மாலன் சாதனையை முறியடித்து உலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை பதிக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார் என்று தெரிய வருகிறது.

சூர்யகுமார் யாதவ் அதிரடியை டி20 போட்டியில்  காண நாம் அடுத்து நடக்க விருக்கும் நியூசிலாந்து எதிரான தொடர் வரை காத்திருக்க வேண்டும்,இந்திய அணியில் இடம்பெற்ற சில வருடங்களிலேயே தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் சூர்யகுமாரை கிரிக்கெட் நிபுணர்கள் ,ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.