IND VS AUS TEST 2023 : முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் புரிந்த மகத்தான சாதனை..!!

இந்திய அணியில் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் அளவிற்கு சூர்யா குமார் யாதவ் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவருக்கு அறிமுக வீரராக வாய்ப்பளிக்க பட்டுள்ள நிலையில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக தனது 30 வயதில் டி20 போட்டிகளில் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் நம்பர் 1 டி20 வீரர் என்ற பெருமையை பெற்றவர் சூரியகுமார் யாதவ், அதன்பின் அண்மையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பது தான் தனது கனவு என்று கூறிய சூரியகுமார் யாதவ், தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் தனது அறிமுக போட்டியில் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்நிலையில் 30 வயதிற்கு பிறகு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் வாய்ப்பு பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யா குமார் யாதவ் அடைந்தார்.
இதன்மூலம் திறமையும் கடின உழைப்பும் இருந்தால் போதும் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று அனைவருக்கும் சூரிய குமார் யாதவ் உணர்த்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும், தனது கடின உழைப்பால் இந்திய அணியில் முன்னணி வீரராக உயர்ந்துள்ள சூர்யா குமார் இளம் வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா குமார் யாதவ் இந்திய அணிக்காக 3 தொடர்களிலும் அறிமுகமான விவரங்கள் :
டி20 போட்டி அறிமுகம் : 14 மார்ச் 2021 (30 வயது )
ஒருநாள் போட்டி அறிமுகம் : 18 ஜூலை 2021 (30 வயது)
டெஸ்ட் போட்டி அறிமுகம் : 9 பிப்ரவரி 2023 (32 வயது )
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாக்பூரில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில், சூர்யா குமார் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு உதவுவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.