1,000 ரன்களை கடந்த முதல் வீரர்.. சூர்யகுமார் யாதவ் அபார சாதனை!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 06, 2022 & 17:24 [IST]

Share

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார். மேலும் 2022 ஆம் ஆண்டில் 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சூர்யகுமார் 25 பந்தில் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் விளாச, இந்தியா 20 ஓவர்களில் 186/5 ரன்களை எடுத்தது. இன்றைய இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்தார்.

SKY என பிரபலமாக அறியப்படும் அவர், 2022 இல் இதுவரை 28 போட்டிகளில் 44.60'க்கு 1,026 ரன்கள் எடுத்துள்ளார். இது எந்த ஒரு பேட்டராலும் எடுக்கப்படாத அதிகபட்ச ஸ்கோராகும். மற்றும் இதில் ஒரு சதம் மற்றும் ஆறு அரை சதங்களையும் அடித்துள்ளார்.

இருப்பினும், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், SKY இந்த ரன்களை அடித்த ஸ்ட்ரைக்-ரேட் 186.54 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வானுக்குப் பிறகு ஒரு வருடத்தில் 1,000 ரன்கள் எடுத்த வரலாற்றில் இரண்டாவது பேட்டர் என்ற சிறப்பையும் SKY படைத்துள்ளார்.

ரிஸ்வான் 2021'இல் 29 போட்டிகளில் 1,326 ரன்களை எடுத்ததன் மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அந்த ஆண்டில் அவர் ஒரு சதம் மற்றும் 12 அரை சதங்களை அடித்தார்.

ஒட்டுமொத்தமாக, 32 வயதான SKY மார்ச் 2021 இல் அறிமுகமானதில் இருந்து இதுவரை 39 டி20 போட்டிகளில் விளையாடி 42.23 சராசரியில் 1,270 ரன்கள் எடுத்துள்ளார்.

நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில், அவர் 225 ரன்களை எடுத்துள்ளார். தொடரில் மூன்றாவது அதிக ரன் எடுத்தவராகவும் உள்ளதோடு ஐந்து இன்னிங்ஸ்களில் 75 சராசரியாக மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார். 193.96 என்ற ஸ்டிரைக் ரேட்டில் இந்த ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் 3 அரை சதங்கள் உட்பட 246 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

2022 காலண்டர் ஆண்டில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 23 போட்டிகளில் 924 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார், கோலி 19 போட்டிகளில் 731 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.