சூர்யா குமார் யாதவ் 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்..! ஐசிசி அறிவிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி..!

இந்திய அணியின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்ற பட்டத்தை அணியில் இடம்பெற்ற ஒரே ஆண்டில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெற்ற சூர்யா குமார் யாதவ், தற்போது அடுத்த பெருமையாக 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக தனது 31 வயதில் முதன் முதலாக டி20 போட்டியில் களமிறமிரங்கினர் சூர்யா குமார் யாதவ், அதன்பின் அதிரடியை சூர்யா குமார் கடந்த 2022 ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் சிறப்பான முறையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
2022 ஆம் ஆண்டு இறுதியில் 31 டி20 போட்டிகளில் விளையாடிய சூர்யா குமார் யாதவ் 2 சதம் மற்றும் 9 அரைசதம் உட்பட 187.43 ஸ்டிரைக் ரேட் உடன் 1164 ரன்களை கடந்த ஆண்டில் பதிவு செய்துள்ளார்.ஒரு வருடத்தில் டி20 போட்டிகளில் 1000 ரன்கள் மற்றும் அதற்கு மேல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யா குமார் யாதவ் படைத்தார்.
கடந்த ஆண்டில் தனது அதிரடி பேட்டிங் மூலம் எதிரணி பவுலர்களை சிதறடித்து இந்திய அணியின் மிஸ்டர் 360 என்ற பட்டத்தை பெற்றார், 2022 ஆண்டில் நடைபெற்ற டி20 போட்டிகளில் மட்டும் 68 சிக்ஸர்களை அடித்துள்ள எந்த வீரரும் படைக்காத புதிய சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார்.தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
இந்திய அணிக்காக தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி பல சாதனைகளை படைத்து வந்த சூர்யா குமார் யாதவை 2022-ஆம் ஆண்டின் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக ஐசிசி தெரிவித்துள்ளது.இந்திய அணிக்கு அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தரும் சூர்யா குமார் யாதவுக்கு இந்திய ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை இணையத்தில் பதிவிட்டு தெரிவித்து வருகிறார்கள்.