தல தோனி மற்றும் ரெய்னா நட்புக்கு ஒரு அடையாளம்..! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் முக்கிய ஒருவர் கேப்டன் கூல் என்று அழைக்க படும் எம்.எஸ்.தோனி தான், அவரின் தலைமையின் கீழ் சிறப்பாக விளையாட அவருடன் சேர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ஒரு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணிக்கு ஐசிசி யின் முக்கிய மூன்று உலக கோப்பைகளை பெற்று தந்த பெருமை கூறியவர் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அவரின் கேப்டன்சியின் கீழ் பல இளம் வீரர்கள் சரியான முறையில் வாய்ப்புகளை பெற்று இந்திய அணியின் தூணாக திகழ்ந்தார்கள், அதில் ஒருவர் தான் இந்திய அணியின் முன்னாள் அதிரடி இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, பல முக்கிய தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவி உள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமை ஏற்ற பிறகு அணியில் மூன்று வித தொடர்களிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வந்தார் ரெய்னா, இவர் 2020 ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அரைமணி நேரத்தில் தானும் சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சுரேஷ் ரெய்னா ஓய்வை அறிவிக்கும் போது அவருக்கு 33 வயது தான் எனவே ஏன் தற்போது அவர் ஓய்வை அறிவித்தார் என்ற கேள்விகள் எழுந்தது.அந்த தருணத்தில் ரெய்னா கூறியது தோனி உடன் தான் என் கிரிக்கெட் பயணம் முழுமையாக இருந்தது, அவர் இல்லாத இடத்தில் நானும் விளையாட முடியாது என்று கூறியிருந்தார்.
இது குறித்து தற்போது பேசிய ரெய்னா மிகவும் நெகிழ்ச்சியான ஒரு விளக்கம் அளித்துள்ளார், அதில் நான் முதலில் தோனிக்காக தான் விளையாடினேன் பிறகு எனது நாட்டுக்காக விளையாடினேன் என்று கூறியுள்ளார், அதாவது கிரிக்கெட் பயணத்தில் ஆரம்பம் முதலே தோனியின் கீழ் ஒன்றாக விளையாடிய நிலையில் அவர் இல்லாமல் விளையாட முடியாது என்று ஓய்வை அறிவித்ததாக கூறினார்.
இதன் மூலம் தோனி மற்றும் ரெய்னா இருவரின் நட்பின் ஆழத்தை பற்றி அறிய முடிகிறது, குறிப்பாக ரெய்னா கூறியது போல சர்வதேச போட்டிகளில் மட்டும் இல்லாமல் உள்நாட்டு தொடரான ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக தோனி தலைமையின் கீழ் தான் ரெய்னா பல ஆண்டு காலம் விளையாடினார் என்பது குறிப்பிட தக்கது.
இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த நட்பிற்கு இலக்கணமாக தோனி மற்றும் ரெய்னா இருவரின் பயணம் இருக்கும் என்பதில் ஐயமில்லை,மேலும் ரெய்னா உடைய இந்த பதிவை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து உண்மையான நட்புக்கு அடையாளம் என்று கூறி வருகிறார்கள்.