ஐபிஎல் 2023 : சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டிப்பா கலக்கும்…!! ரெய்னா கொடுத்த அப்டேட்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் சில முக்கிய வீரர்களுக்கு சேப்பாக்கத்தில் புகழ் அடைய போகிறார்கள் என்றும், மேலும் தல தோனி குறித்து சுவரிசியமான பதிவு ஒன்றை செய்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆண்டு தொடரை மேலும் சுவாரசியமாக்கும் விதத்தில் அனைத்து அணிகளும் தங்களின் ஹோம் கிரௌண்டில் 7 போட்டிகளில் விளையாட உள்ளார்கள்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் களமிறங்க உள்ளது, இது குறித்து பேசிய சென்னை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை அணி இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார்கள் என்று கூறினார்.
சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார் என்று ரெய்னா கூறினார், மேலும் தோனிக்கு சென்னையில் கிடைக்கும் சிறப்பான வரவேற்பு இந்த முறை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைக்கும் என்று கூறினார். இந்திய அணிக்காக சிறந்த பார்மில் கலக்கி வரும் ஜடேஜா ஐபிஎல் தொடரிலும் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய வீரராக திகழ்வார் என்று கூறினார்.
அதேபோல் சென்னை சேப்பாக்கத்தில் முதல் முறையாக விளையாட உள்ள அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார், மேலும் சென்னை அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்று கூறினார்.இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி அஹமதாபாத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.