இந்திய அணிக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த சுனில் கவாஸ்கர்..!! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணி வீரர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார், இதனை அறிந்த இந்திய அணியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்துள்ளார்கள்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மிரட்டல் வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.மேலும் மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இந்திய அணி இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும், மேலும் இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது, இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணி வீரர்கள் இடத்தில் தனது ஆசையை நிறைவேற்றும் மாறு கூறியுள்ளார்.
அதாவது இந்திய அணி ஐசிசி உலக கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிறது, கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி சுற்று வரை சென்ற இந்திய அணி தோல்வியை தழுவியது. அதேபோல் குறைந்த ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் அரை இறுதிவரை சென்று வெளியேறி விடுகிறது. இந்த முறை இந்திய அணி சிறந்த பார்மில் உள்ளதால் கண்டிப்பாக உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுனில் கவாஸ்கர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு அணி சாம்பியன் பட்டத்தை பெரும் பொழுது அந்த அணியுடன் சேர்ந்து அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள் என்பது உறுதி. இந்திய அணி இந்த முறை டெஸ்ட் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை இரண்டையும் பெற்று தர வேண்டும் என்று கூறினார். இதற்கு நடுவில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி அந்த கோப்பையும் பெற்றால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.
சுனில் காவஸ்கர் உடைய பதிவிற்கு ஆதரவு அளித்து இந்திய அணியின் ரசிகர்கள் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இணையத்தில் இந்த ஆண்டில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.