இந்தியா vs இலங்கை டி-20 : இத்தனை நோ-பால்களா வீசுவது ..! வேகப்பந்து பௌலர்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல்..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 2-வது டி20 போட்டியில் புனேவில் உள்ள மைதானத்தில் விளையாடினார்கள்,இதில் இந்திய அணி மோசமான பவுலிங் செய்ததால் பல விமர்சனங்களுக்கு உள்ளானது,குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று நடத்த 2-வது டி-20 போட்டியில் இந்திய அணியின் இளம் பௌளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் மூன்று நோ பால்களை வீசி அதிர்ச்சி அளித்தார்,அந்த ஓவரில் தேவையில்லாமல் 13 ரன்களை கொடுத்தார்.அதன்பின் அவர் 19-வது வரை வீசிய அர்ஷ்தீப் மீண்டும் ஒரு நோ பாலை வீசினார்,அந்த பந்தில் அவுட் ஆனா இலங்கை அணியின் கேப்டன் ஷனக மீண்டும் நாட் அவுட் கொடுக்கப்பட்டு களத்துக்கு வந்தார்.
இதனை குறித்து வேதனை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பௌலர்கள் இது போன்ற தவறுகள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.மேலும் இப்போது உள்ள இளம் வீரர்கள் அனைவரும் எங்கள் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை ,இது போன்ற தவறுகள் நடப்பது இயல்பு என்று எளிதாக கூறிவிடுகிறார்கள்.
இது போன்ற தொடர்ச்சியாக நோ பால் போடும் தவறு எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது ஒரு பௌளர் கட்டுப்பாட்டில் தான் எல்லாம் உள்ளது என்று கூறினார்.இந்திய அணி ஜெயிக்க வேண்டிய போட்டியில் பௌலர்கள் செய்த தவறுகளால் தோல்வியை தழுவிய நிலையில் இந்திய அணியின் ரசிகர்கள் உட்பட பலரும் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்திய மற்றும் இலங்கை அணி தலா ஒரு வெற்றிகளை பெற்று தொடரில் சம நிலையில் உள்ளார்கள்,இந்நிலையில் இந்திய அணி அடுத்து நடக்கும் இறுதி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.