தெறித்தன பற்கள்.. போட்டியின் நடுவே பயங்கரம்.. கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த துயரம்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 08, 2022 & 14:39 [IST]

Share

காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும். கிரிக்கெட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த காலங்களில் விளையாட்டில் பல ஆன்-ஃபீல்ட் விபத்துக்கள் நடந்துள்ளன, அவை பலரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன. அவற்றில் ஒன்று, ஆஸ்திரேலிய வீரர் பில் ஹியூஸ், சீன் அபோட் வீசிய பவுன்சர் அடித்ததில் காயமடைந்து உயிரிழந்தார்.

மற்றொன்று, 2012 ஆம் ஆண்டு வார்ம்-அப் ஆட்டத்தின் போது, ஸ்டம்பின் மீது இருந்த பெயில் விழித்திரையை சேதப்படுத்தியதால், தென்னாப்பிரிக்காவின் மூத்த ஸ்டம்பர் மார்க் பௌச்சருக்கு ஒரு பயங்கரமான காயத்தை கண்ணில் பெற்றார். அந்த வகையில் இப்போது இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் பீல்டிங் செய்தபோது நான்கு பற்கள் தெறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இலங்கையில் நடந்து வரும் லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், இலங்கையின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சாமிக்க கருணாரத்ன பீல்டிங் செய்யும் போது மோசமான காயம் அடைந்தார். கருணாரத்ன கேட்ச் பிடிக்க முயற்சிக்கும் போது முகத்தில் பந்து தாக்கி, நான்கு பற்களை இழந்தார்.

சமிக கருணாரத்ன உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக காலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சாமிகா உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் கண்டி அணிக்கு அவர் விரைவில் திரும்புவார் எனவும் கண்டி ஃபால்கன்ஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.