Sri Lanka Tour of India 2023 Squads : இந்தியா-இலங்கை தொடருக்கான அணிகளின் பட்டியல்

Representative Image. Representative Image.

By Sekar Published: December 26, 2022 & 12:23 [IST]

Share

India vs Srilanka series 2023 Squads : சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக் குழு, செவ்வாய்க்கிழமை அன்று  (27/12/2022) இலங்கை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது,அடுத்து இதே போல் இலங்கை கிரிக்கெட் கவுன்சிலும் விரைவில் தனது அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதல் தொடராக உள்நாட்டில் நடக்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (Srilanka Tour of India 2023) நடக்க உள்ளது.

டி20 போட்டிகள் முறையே ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய திதிகளிலும், ஒருநாள் போட்டிகள் முறையே ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கோட், கவுகாத்தி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி (India Squad for Sri Lanka T20Is) : ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (து.கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி (India Squad for Sri Lanka ODIs) : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர் ), ஹர்திக் பாண்டியா (து.கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் முகமது ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

டி20 தொடருக்கான இலங்கை அணி (Sri Lanka Squad for India T20Is) : தசுன் ஷனக (கேப்டன்),வனிந்து ஹசரங்க(து.கேப்டன்),பாத்தும் நிஸ்ஸங்க,அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ச, சரித் அசலங்கா,தனஞ்சய டி சில்வா,அஷேன் பண்டார,மஹீஷ் தீக்ஷனா,சாமிக்க கருணாரத்ன,டில்ஷான் மதுஷங்க,கசுன் ராஜித, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷான், லஹிரு குமார, நுவான் துஷார.   

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி (provisional Sri Lanka Squad for India ODIs) : தசுன் ஷனக (கேப்டன்),குசல் மெண்டிஸ்(து.கேப்டன்), பாத்தும் நிஸ்ஸங்க,அவிஷ்க பெர்னாண்டோ,சதீர சமரவிக்ரம,சரித் அசலங்கா,தனஞ்சய டி சில்வா, அஷேன் பண்டார, வனிந்து ஹசரங்க,மஹீஷ் தீக்ஷனா,ஜெஃப்ரி வான்டர்சே,சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் மதுஷங்க,கசுன் ராஜித,நுவனிது பெர்னாண்டோ,துனித் வெல்லலகே,பிரமோத் மதுஷான்,லஹிரு குமார.