ஐ.பி.எல் 2023: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய அசத்தல் பிளேயிங்-11..! பலனளிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்ற மிகவும் அதிக தொகை கொண்ட அணிகளில் முக்கிய அணியாக களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அசத்தலாக செயல்பட்டு அணியின் முக்கிய இடங்களை நிரப்பியது,குறிப்பாக அணியின் மிடில் ஆர்டர் இடத்திற்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.5 கோடிக்கு வாங்கியது.
அதனை அடுத்து அணியின் கேப்டனாகவும் தொடக்க வீரராகவும் செயல் படும் திறமை உள்ள இந்திய வீரர் மயங்க அகர்வாலை 8.25 கோடிக்கு வாங்கியது,மேலும் தங்களிடம் இருந்த தொகையை வைத்து அசத்தல் ஸ்பின்னர்கள் அகேல் ஹொசின் மற்றும் அடில் ரஷித்தையும் வாங்கி அணியை பலப்படுத்தினார்கள்.
இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடர்களில் ஏற்பட்ட தோல்விகளை ஆராய்ந்து தங்கள் அணியில் இருந்த குறைகளை தீர்க்கும் வகையில் புதிய அணியை உருவாக்க ஏலத்தில் சிறப்பாக பங்கேற்று அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று விட்டார்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகளில் தற்போது உள்ள வீரர்களை வைத்து ஐ.பி.எல் போட்டியில் விளையாட உள்ள தோராயமான பிளேயிங் 11-கள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியாகி வரும் நிலையில் ஹைதராபாத் அணியின் தோராயமான பிளேயிங் 11-களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹைதராபாத் அணியின் தோராயமான பிளேயிங் 11 : மயங்க் அகர்வால்,அபிஷேக் சர்மா,ராகுல் திரிபாதி, ஹாரி புரூக்,ஐடன் மார்க்ரம்,அப்துல் சமத்,ஹென்ரிச் கிளாசென்,வாஷிங்டன் சுந்தர்,புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்,மார்கோ ஜான்சன்.
ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
விக்கெட்கீப்பர்கள் : கிளென் பிலிப்ஸ் (நியூசி), நிதிஷ் குமார் ரெட்டி, உபேந்திர சிங் யாதவ், ஹென்ரிச் கிளாசென் (தென்.ஆ)
பேட்ஸ்மேன்கள் : ஐடன் மார்க்ரம் (தென்.ஆ), ராகுல் திரிபாதி, அன்மோல்ப்ரீத் சிங், மயங்க் அகர்வால், ஹாரி புரூக் (இங்கி).
ஆல்ரவுண்டர்கள் : மார்கோ ஜான்சன் (தென்.ஆ),அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மயங்க் டாகர், சன்வீர் சிங், சமர்த் வியாஸ், விவ்ராந்த் சர்மா,அப்துல் சமது.
பௌலர்கள் : ஃபசல்ஹாக் ஃபரூக்கி (ஆப்கானிஸ்தான்),கார்த்திக் தியாகி, புவேஷ்வர் குமார், T. நடராஜன், உம்ரான் மாலிக், அகேல் ஹொசைன், மயங்க் மார்கண்டே, அடில் ரஷித் (இங்கி).