டெஸ்ட் கிரிக்கெட்டில் 91 ஆண்டுகால சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்கா.. ஆனாலும் சோகத்தில்.. காரணம் என்ன தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு சுருண்ட நிலையில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 386 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இன்று நான்காம் நாள் 204 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், தென்னாப்பிரிக்காவின் பெருமைக்குரிய சாதனையை ஆஸ்திரேலியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
மேலும் தென்னாப்பிரிக்கா 1931 இல் பிரிஸ்பேனில் இன்னிங்ஸ் மற்றும் 163 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தான் ஆஸ்திரேலியாவில் மோசமான தோல்வியாக இருந்த நிலையில், தற்போது அதை விட மோசமான தோல்வியை பெற்று சோக சாதனை படைத்துள்ளது.