IND VS AUS TEST 2023 : கே.எல்.ராகுல் மீது சவுரவ் கங்குலி கடும் விமர்சனம் ...!! மோசமான பார்மில் தவிக்கும் நிலை.!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மோசமான பார்மில் உள்ளார் என்பதால் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறார். தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி ராகுல் பார்மை விமர்சித்து பதிவு செய்துள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று தொடரில் 2-0 என்ற நிலையில் முன்னிலையில் இருந்தாலும் எதிர்பார்த்த அளவு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விட்டார்கள், குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார், குறிப்பாக 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 38 ரன்கள் மட்டுமே பதிவு செய்துள்ளார். மேலும் கடைசியாக நடைபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட 25 ரன்களுக்கு மேல் ராகுல் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மொத்தம் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல் உடைய சராசரி 33.44 பதிவாகி உள்ளது, எனவே ராகுல் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் மேலும் தொடர்ந்து பல தரப்பில் இருந்து விமர்சனங்களை பெற்று வருகிறார்.தற்போது பிசிசிஐ யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி மிகவும் கடுமையாக ராகுலை விமர்சித்துள்ளார்.
சவுரவ் கங்குலி தனது பதிவில் , இந்திய மண்ணில் நடைபெறும் போட்டியில் உங்களால் ரன்கள் பெற முடியவில்லை என்றால் இப்படி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகும் நிலை தான் ஏற்படும் என்று கே.எல்.ராகுல் குறித்து கூறினார்.மேலும் ராகுல் மட்டும் இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகவில்லை,இவரை போல் பல வீரர்கள் கடந்த காலங்களில் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார்கள் என்று கூறினார்.
இந்திய அணியின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது ஒரு ஆரம்பம் தான், ராகுலை அணியில் தொடர்ந்து எடுப்பதால் தேர்வு குழு பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது, ஆனால் ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் ராகுல் உடைய பழைய ஆட்டத்தை கருத்தில் கொண்டு அணியின் முக்கிய வீரர் என்பதால் தொடர்ந்து அணியில் இடம் பெற வைக்கிறார்கள் என்று கூறினார்.
கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர் என்பதில் ஐயமில்லை ஆனால் விரைவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது நிலையை நிரூபிக்க வேண்டும் என்று கங்குலி கூறிய கருத்தை ஆதரவு அளிக்கும் விதத்தில் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.