ரிஷாப் பந்த் இந்திய அணிக்கு திரும்ப 2 ஆண்டுகள் ஆகும்..?? சௌரவ் கங்குலி பதிவு..!!!

இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்த ரிஷாப் பந்த் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் உள்ளார். இந்நிலையில் பந்த் உடல்நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி முக்கிய தகவலை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணிக்காக சிறந்த பேட்ஸ்மேனாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்த பந்த் இடத்தை, தற்போது வரை யாராலும் நிரப்ப முடியாத நிலையில் இந்திய அணி மிகவும் சிரமப்பட்டு வருகிறது, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பந்த் இடத்தை எந்த ஒரு வீரரும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு பந்த் திரும்ப இந்த வருட இறுதி ஆகலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது பிசிசிஐ யின் முன்னாள் தலைவர் மற்றும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குனராக செயல்பட உள்ள சௌரவ் கங்குலி ரிஷாப் பந்த் உடல்நிலை முன்னேற்றம் குறித்து முக்கிய தகவலை பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு ஒரு ஊடகத்திற்கு கங்குலி அளித்த பேட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பந்த் பற்றி எழுந்த கேள்விக்கு கங்குலி கூறியது, அந்த விபத்திற்கு பிறகு நான் இரண்டு முறை பந்த் இடம் பேசினேன் பந்த் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்களில் பயணித்து வருகிறார் விபத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் பல சிகிச்சைகளுக்கு பின் பொறுமையாக குணமாகி வருகிறார், இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் இந்திய அணிக்காக மீண்டும் பந்த் விளையாடுவார் என்று கூறினார்.
இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரில் மற்றும் இல்லாமல் அடுத்த வருடம் வரை பந்த் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு குறைவு என்று தெரிய வந்துள்ளது. கங்குலி உடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.