IND VS AUS TEST 2023 : 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தான்..!! கம்மின்ஸ் விலகல்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், இறுதியாக நடைபெற உள்ள 4 வது டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது, எனவே, ஆஸ்திரேலிய அணியை மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் தான் வழிநடத்துவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், கடைசியாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பாராத விதத்தில் படுதோல்வி அடைந்து அதிர்ச்சியை அளித்தது. ஆஸ்திரேலியா அணி புதிய கேப்டன் ஸ்மித் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு தொடரில் முதல் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்க வைத்தது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இடத்தை உறுதி செய்துள்ளது, ஆனால் இந்திய அணி 3 வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் உலக டெஸ்ட் ஸாஹம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடைசியாக நடைபெற உள்ள 4 வது டெஸ்ட் போட்டியில் உறுதியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியை நோக்கி கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ,முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். அதே சமயத்தில் 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சவால் விடும் விதத்தில் ஆஸ்திரேலியா அணியை வழி நடத்திய ஸ்டீவ் ஸ்மித் தான் 4வது டெஸ்ட் போட்டியிலும் அணியை வழிநடத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலியா அணியில் இருந்து முன்னணி வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகிய நிலையில், அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக அணியில் இருந்து விலகினார்.
தற்போது போட்டி ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கம்மின்ஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது, எனவே ஸ்மித் மீண்டும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று உறுதியாகியுள்ளது.
இந்த தொடரில் 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் வெற்றியை பெற்று தந்ததன் மூலம் இந்திய மண்ணில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெரும் வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி விளையாட உள்ள நிலையில் ஸ்மித் நிச்சயமாக ஒரு தடைக்கல்லாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.