Representative Image.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்துள்ள நிலையில், "Singam Smiles in Singara Chennai" என்ற கேப்ஷனுடன் தல தரிசனம் கொடுக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளது.
ஐபிஎல் 2023 சீசனுக்காக மினி ஏலத்தை முன்னிட்டு அனைத்து அணிகளும், தங்கள் அணியில் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கலாம், எந்தெந்த வீரர்களை விடுவிக்கலாம் என்பதை முடிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 75வது ஆண்டு பவள விழாவில் பங்கேற்பர்தற்காக சென்னை வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி கலந்துகொண்டுள்ள நிலையில், தோனியின் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி "Singam Smiles in Singara Chennai" என்ற கேப்ஷனுடன்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசனுக்கு சொந்தமானது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் சீனிவாசன் பிசிசிஐ தலைவராகவும் முன்பு இருந்துள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. ஆந்திர நிதியமைச்சர் உப்பெண்ணா ரெட்டி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.