கோலி மற்றும் தவான் சாதனையை முறியடிக்க போகும் இளம் வீரர்…! ரசிகர்கள் பெருமிதம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 18, 2023 & 12:36 [IST]

Share

இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது, இந்த வெற்றிகளை காணும் பொழுது உலக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு அதிகரிப்பதாக நம்பிக்கை எழுகிறது. இந்நிலையில் அணியின் வெற்றி முக்கிய காரணமாக விளங்கும் வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றியை பெற்று தந்து பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர்.

இந்த வரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி தனது பேட்டிங்கில் அசத்தி வரும் இளம் வீரர் சுப்மன் கில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஒருநாள் தொடரில் தனது இடத்தை உறுதி படுத்தி விட்டார் என்று சொன்னால் மிகையில்லை.    

இந்திய அணியின் புதிய தொடக்க வீரராக ரோஹித் சர்மா உடன் களமிறக்கப்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் இலங்கை எதிரான ஒருநாள் தொடரில் தனது அசாத்திய பேட்டிங்கை வெளிப்படுத்தி ஒரு சதம் மற்றும் அரைசதம் அடித்து தன் மீது இந்திய அணியின் தேர்வாளர்கள் வைத்து நம்பிக்கையை காப்பாற்றினார் என்று கூறலாம்.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் படைத்த சாதனையை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 18 இன்னிங்சில் 894 ரன்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களை வெறும் 24 இன்னிங்சில் அடித்துள்ளார், இந்த சாதனையை சுப்மன் கில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முறியடிப்பார் என்று பெரிதும்  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்காக சுப்மன் கில் 18 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், இதுவரை ஒரு நாள் போட்டிகளில் கில் 2 சதம் மற்றும் 5 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தவிர்க்க முடியாத முன்னணி தொடக்க வீரராக சுப்மன் கில் எதிர்காலத்தில் இருப்பார் என்பதில் ஐயமில்லை.