Representative Image.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பில் அதிரடி வெளிப்படுத்தி ரன்களை இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குவித்தார்கள். இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக நியூசிலாந்து தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சர்வதேச அரங்கில் 208(149) ரன்கள் பதிவு செய்து அசத்தினார்.அதன்பின் 2வது ஒருநாள் போட்டியில் நிதானமாக விளையாடி 40*(53) ரன்கள் எடுத்தார்,இறுதியாக 3 வது ஒருநாள் போட்டியில் 112(78) ரன்கள் பதிவு செய்தார்.
இதன்மூலம் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் ஒரு நாள் போட்டிகளில் 360 ரன்கள் சுப்மன் கில் பதிவு செய்த நிலையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின் உலக சாதனையை சமன் செய்து அசத்தி உள்ளார்.
இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரு தரப்பு ஒருநாள் தொடரில் பாபர் அசாம் 360 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்து இருந்த நிலையில் அதனை தற்போது சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இந்திய அணியின் எதிர்காலம் நம்பிக்கையான வீரர்கள் கையில் இருப்பதாக ரசிகர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.