ஐசிசி “பிளேயர் ஆப் தி மந்த்” விருதை வெல்ல சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் தேர்வு..! ரசிகர்கள் மகிழ்ச்சி..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து அதில் ஒருவரை “ஐசிசி பிளேயர் ஆப் தி மந்த்” என்று அறிவித்து அவர்கள் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் கௌரவிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளது, அந்த அவ்வகையில் இந்த மாதம் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இந்த விருதை வெல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு கடந்த மாதத்தில் விளையாடிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை கில் மற்றும் சிராஜ் வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய கில் சிறப்பாக விளையாட தவறினாலும், அதே தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு சதம் உட்பட 207 ரன்கள் குவித்தார்.
அதே பார்மில் தொடர்ந்த சுப்மன் கில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சர்வதேச அரங்கில் அசத்தினார்.மேலும் இந்த தொடரில் 360 ரன்கள் பதிவு செய்து பாபர் அசாம் உடைய உலக சாதனையை சமன் செய்து அசத்தினார்.
அதே சமயத்தில் இந்திய அணியின் முன்னணி பவுலர் ஜஸ்பிரிட் பும்ரா காயத்தினால் அணியில் இல்லாத குறையை தனது அசத்தல் பவுலிங் மூலம் சரி செய்து இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தி சர்வதேச அரங்கில் தனது பெயரை நிலை நிறுத்தினர் முகமது சிராஜ்,மேலும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரில் தனது மிரட்டல் பவுலிங் மூலம் எதிரணியை திணறச் செய்து விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார், குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மேலும் இலங்கை எதிரான தொடரில் சிறந்த எகானமி உடன் பந்து வீசி அசத்தினார்.
இந்நிலையில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட இந்த இரண்டு வீரர்கள் ஐசிசியால் ஜனவரி மாதத்தின் சிறந்த பிளேயர் விருதை வாங்க தேர்வாகியுள்ளார்கள் இந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே இடம் பெற்றுள்ளார்.இந்திய வீரர்கள் இருவரில் யாராவது ஒருவர் இந்த விருதை வெல்வார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.