தவான் சொன்னதை கேட்டிருந்தா ரிஷப் பண்டுக்கு இப்படி ஆயிருக்காதே.. வருத்தப்படும் ரசிகர்கள்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 31, 2022 & 12:11 [IST]

Share

ரிஷப் பண்ட் மரண வாயிலுக்கு சென்று திரும்பி வந்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேற்று காலை, பயங்கரமான கார் விபத்தில் ரிஷப் பண்ட் காயமடைந்ததைப் பற்றிய சோகமான செய்தி வந்தது. 

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பண்ட் டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஹரித்வார் மாவட்டத்தின் மங்களூர் மற்றும் நர்சன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, டிவைடரில் தனது காரை மோதினார். இதனால் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். 

அவரது கார் தீப்பிடித்து எறிந்த நிலையில், அங்கிருந்த பஸ் ட்ரைவர் மற்றும் கண்டக்டர் அவரை மீட்டனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 2019 இன் வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் ஷிகர் தவான் பண்டிடம் மெதுவாக காரை ஓட்டுமாறு அறிவுறுத்துவதைக் காட்டுகிறது. தவான் சொன்னதை கேட்டிருந்தா இப்படி ஆயிருக்காதே என ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.