ஷர்துல் தாக்கூருக்கு விராட் கோலி கொடுத்த ஐடியா…! ரசிகர்கள் பாராட்டு..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 19, 2023 & 15:23 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இறுதி ஓவர் வரை சென்றது, இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் இறுதி ஓவர் வீசி முக்கிய விக்கெட்டை  பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்த ஷர்துல் தாக்கூர் போட்டிக்கு பின் சில முக்கிய தருணங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய 349 ரன்களை பதிவு செய்து நியூஸிலாந்து அணிக்கு ஒரு மிக பெரிய இலக்கை அழைத்தது, இந்திய அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாத நியூசிலாந்து வீரர்கள் 131 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாள்.

அதன்பின் ஜோடி சேர்ந்த நியூசிலாந்து வீரர்கள் மைக்கேல் பிரேஸ்வெல்  மற்றும் மிட்செல் சான்ட்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் போக்கையே மாற்றினார்கள், இந்நிலையில் இறுதி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்து அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்றார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து இறுதி ஓவரில்  20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ,அப்போது இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் இறுதி ஓவரை வீச வந்தார்.இந்த ஓவரில் பிரேஸ்வெல் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அரங்கை அமைதியாக்கினார்.

அதன்பின் தாக்கூர்  வீசிய இரண்டாவது ஒன் பவுன்ஸ் கொடுக்க பட்டு வொயிடு வழங்கப்பட்டது, அடுத்த பந்தில் யார்க்கர் பால் வீசி  மைக்கேல் பிரேஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தார் ஷர்துல் தாக்கூர்.

இது குறித்து தாக்கூர் அளித்த பேட்டியில் கடைசி ஓவரில் தான் பதட்டமாக இருந்ததாகவும் அப்பொழுது யார்க்கர் பால் வீசும் படி விராட் கோலி அறிவுரை வழங்கியதாக கூறினார்.அதை கேட்டு அப்படியே செய்ததால் இந்திய அணி வெற்றி பெற்றதாக கூறினார். இந்த நிகழ்வை அறிந்த பலரும் இணையத்தில் இந்திய அணியின் கூட்டு முயற்சியையும் இறுதிவரை இருந்த விடாமுயற்சியும் பாராட்டி வருகின்றனர்.