Representative Image.
2023 ஆம் ஆண்டு ஐசிசி அண்டர்-19 மகளிர் உலகக் கோப்பைக்கு ஷஃபாலி வர்மா தலைமை தாங்குவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷஃபாலி வர்மா 2020 டி20 மகளிர் உலகக்கோப்பையில் இந்திய சீனியர் அணியிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தற்போது 18 வயது தான் ஆகிறது என்பதால், அவர் U-19 அணியிலும் விளையாடி வருகிறார்.
16 அணிகள் பங்கேற்கும் ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 14-29 வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடன் டி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அங்கு அணிகள் ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக இணைக்கப்படும்.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் ஜனவரி 27 ஆம் தேதி போட்செஃப்ஸ்ட்ரூமில் ஜேபி மார்க்ஸ் ஓவலில் நடைபெறும். இறுதிப் போட்டி ஜனவரி 29ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும்.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய U-19 மகளிர் அணி: ஷஃபாலி வர்மா (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத் (துணை கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி த்ரிஷா, சௌமியா திவாரி, சோனியா மெஹதியா, ஹர்லி கலா, ஹிரிஷிதா பாசு (விக்கெட் கீப்பர்), சோனம் யாதவ் , மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, டைட்டாஸ் சாது, ஃபலாக் நாஸ், ஷப்னம் எம்.டி., ஷிகா, நஜ்லா சி.எம்.சி., யஷாஸ்ரீ.