சோதனை மேல் சோதனை சஞ்சு சாம்சன் வாழ்வில்..! ரசிகர்கள் வேதனை ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 05, 2023 & 10:30 [IST]

Share

இந்திய மற்றும் இலங்கை அணிகள் 3-டி 20 மற்றும் 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்,இந்த தொடரில் டி-20 அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன் காயம் காரணமாக  தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய மற்றும் இலங்கை அணிகள் தங்களின்  முதல் டி-20 போட்டியை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடினார்கள்,இதில் இறுதி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. 

இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

இரண்டாவது இன்னிங்சில் சஞ்சு சாம்சன் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது,போட்டியின் முதல் ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை தூக்கி அடித்தார் பாத்தும் நிஸ்ஸங்க அதை கேட்ச் பிடிக்க முயன்றபோது சாம்சனின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

அந்த காயத்தையும் பெரிதாக பொருட்படுத்தாமல் சாம்சன் தொடர்ந்து பீல்டிங் செய்து கொண்டிருந்தார்,இதனால் அவரின் முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் வீக்கம் அதிகமானது. அதன்பின் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயம் முழுமையாக குணமாகும் வரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் மொத்தமாக இந்த டி-20 தொடரில் இருந்து விலகியுள்ளார் என்றும்,அவருக்கு பதிலாக விதர்பாவை சேர்ந்த 29 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஜிதேஷ் சர்மா ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2022-ஆம் ஆண்டு விளையாடியுள்ளார்,இவர் மொத்தமாக 12 போட்டிகளில் 163.63 ஸ்ட்ரைக் ரேட் உடன் 264 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று (ஜனவரி 5) 2-வது டி20 போட்டியில் புனேவில் விளையாட உள்ளார்கள்.  

இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்கப்படமால் அது பெரிய சர்ச்சையாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது,எனவே இந்த தொடரில் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில்  அவரின் அதிரடி ஆட்டத்தை காணலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிகுந்த ஏமாற்றமாக இந்த நிகழ்வு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.