சுப்மன் கில் அடித்த சிக்ஸர்கள் தோனியை நினைவு படுத்தியது..! சஞ்சய் மஞ்ரேக்கர் பெருமிதம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 20, 2023 & 13:32 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியை  பற்றி தான் இணையத்திலும் கிரிக்கெட் வட்டாரங்களிலும்  உரையாடல்கள் அரங்கேறி வருகிறது,அந்த அளவிற்கு முதல் ஒருநாள் போட்டியில் பல அதிரடிகள்  நிகழ்த்தினார்  சுப்மன் கில், அவரின் ஆட்டத்தை  பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற முக்கிய முதல் காரணம் சுப்மன் கில் தான் என்று கூறினால் மிகையில்லை,ஏனென்றால் முதல் ஒருநாள் போட்டியில் முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில்  ஆட்டமிழந்த நிலையில்,இளம் வீரர் சுப்மன் கில் நிதானமாக பொறுப்புடன் இறுதிவரை விளையாடி ரன்களை குவித்தார்.

இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 சிக்ஸர்கள் மற்றும் 19 பௌண்டரிகள் உட்பட 208 ரன்கள் அடித்து சர்வதேச அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.மேலும் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் அடித்து தனது இரட்டை சதத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சுப்மன் கில் அடித்த சிக்சர்களை பார்க்கும் பொழுது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி அடிக்கும் சிக்சர்கள் தான் கண்முன் வந்து போனதாக கில் உடைய அதிரடி ஆட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்போது கிரிக்கெட் நிபுணராக விளங்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் ஒரு பதிவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்திய அணி அடுத்து 2வது ஒருநாள் போட்டியில் ராய்ப்பூரில் உள்ள மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது, இரு அணிகளும் சிறப்பான பார்மில் உள்ளதால் இந்த போட்டியிலும் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.