Representative Image.
இந்திய மற்றும் இலங்கைக்கு எதிராக 3-டி20 போட்டிகள் மற்றும் 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்திய மண்ணில் ஜனவரில் நடக்கவுள்ளது,அதில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு குமார் சங்கக்காரா ஒரு சிறப்பான அறிவுரையை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்ற உள்ள இந்திய அணியின் பட்டியலை சமீபத்தில் பி.சி.சி.ஐ நிர்வாகம் வெளியிட்டது.
அதில் பல நாட்களாக வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த முன்னனி வீரர்கள் ஷிகர் தவான் ,ரிஷாப் பந்த் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.மேலும் கே.எல்,ராகுலின் பெயர் ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அதேபோல் பல நாட்களாக சமூக வலைதளங்களில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் பேச்சு பொருளாக இருந்த வீரர் சஞ்சு சாம்சனின் பெயர் டி-20 அணியில் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கண்டிப்பாக 3-டி20 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு இலங்கை அணியின் முன்னால் விக்கெட்கீப்பீர் பேட்ஸ்மேன் குமார் சங்கக்காரா ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார்,சாம்சன் ஒரு அற்புதமான வீரர் என்பதில் சந்தகமில்லை அவர் இந்த தொடரில் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் இயல்பாக விளையாட வேண்டும்.
மேலும் இது தான் நமக்கான வாய்ப்பு கண்டிப்பாக சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் நாம் யார் என்பதை கட்ட வேண்டும் என்று எந்த ஒரு எண்ணமும் இல்லாமல்,எப்போதும் போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும் வேறு எதுவும் செய்ய தேவை இல்லை என்றார்.
சஞ்சு சாம்சன் தனது நாட்டிற்காக விளையாடும் போது மிகவும் தெளிவாக விளையாட வேண்டும்,நம் நாட்டிற்காக விளையாடுகிறோம் நமது கடமையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை தவிர எந்த ஒரு எண்ணமும் மனதில் இல்லாமல் இருப்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த மனநிலையில் விளையாடினாலே போதும் அனைத்தும் அவருக்கு சிறப்பாகவே நடக்கும் என்று சங்கக்காரா கூறினார்.
இந்திய அணிக்காக சாம்சன் 2015-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானாலும் ,இதுவரை வாய்ப்பு சரியாக கிடைக்காமல் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் குழப்பம் அடைந்து விட கூடாது.
அதனால் அவரது விளையாட்டும் பாதிக்கப்படும் என்பதற்காக தான் சங்கக்காரா இப்படி ஒரு யோசனை கூறி இருப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சாம்சன் ஒரு திறமையான அதிரடி வீரர் அவரின் ஆட்டத்தை காண ஆவலாக உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.