ஐ.பி.எல் 2023 : எனக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் தான் கிடைத்தது..! ஏலத்தில் விற்கப்படாமல் போன இந்திய முன்னனி பௌலரின் கருத்து..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 28, 2022 & 12:30 [IST]

Share

ஐ.பி.எல் ஏலத்தில் இளம் வீரர்கள் பல கோடிகளுக்கு அணிகளால் வாங்கப்பட்டார்கள்,அதே சமயத்தில் பல முன்னனி அனுபவ வீரர்கள் எந்த அணியாலும் வாங்கப்படாமல் அதிர்ச்சியையும் அளித்தார்கள்.

ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசனுக்கான மினி ஏலம் அண்மையில் கொச்சியில் ஆரவாரமாக நடந்து முடிந்தது,மேலும் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஒரு வீரரை விற்ற ஏலமாகவும் இது பதிவானது.அதே சமயத்தில் பல முன்னனி வீரர்கள் ஏலத்தில் விற்கப்படாமல் போனது ஆச்சரியத்தையும் அளித்தது.      

இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடரில் அசத்தல் பௌலிங்கை வெளிப்படுத்தி முன்னனி வேகப்பந்து பௌளராக விளங்கும் சந்தீப் ஷர்மாவைவும் இறுதிவரை எந்த அணியாலும் வங்கப்படவில்லை .அவர் தனது அடிப்படை விலையாக 50 லட்சத்தை நியமித்திருந்து நிலையில் எந்த அணியும் அவரை வாங்க விருப்பம் காட்டவில்லை.

இது குறித்து சமீபத்தில் மனம்திறந்த சந்தீப் சர்மா கூறியது, நான் இதுவரை விளையாடி அனைத்து போட்டிகளில் எனது முழு பங்களிப்பையும் அணிகளுக்காக வழங்கியுள்ளேன்,மேலும் பல போட்டிகளில் முக்கிய நேரங்களில் முன்னனி வீரர்களின் விக்கெட்களை கைபற்றி அணியின் வெற்றிக்கும் உதவியுள்ளேன்.

அண்மையில் நடந்த ரஞ்சி டிராபியில் கடைசி சுற்றில் 7-விக்கெட்களை கைப்பற்றியுளேன்,சையத் முஷ்டாக் அலி தொடரிலும் சிறப்பாகவே விளையாடினேன்,ஆனால் ஏன் இந்த ஏலத்தில் ஒரு அணி கூட என்னை வாங்கவில்லை என்பது தெரியவில்லை எனக்கு மிகுந்த வருத்தத்மும்  ஏமாற்றமும் தான் கிடைத்தது என்றார்.

சந்தீப் ஷர்மா ஒரு திறமையான பௌலர் என்பதால் கண்டிப்பாக ஏதாவது ஒரு அணியில் ஒரு வீரரால் விளையாட முடியாத நிலை ஏற்படும் பொழுது இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது