IND VS AUS TEST 2023 : புஜாராவின் சாதனைகள் சரியாக அங்கீகரிக்க படவில்லை..! சச்சின் கருத்து..!

இந்திய மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இரு அணிகளின் வீரர்களும் பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார்கள், அந்த வரிசையில் ஒரு புதிய மைல்கல்லை அடைய உள்ள செதேஷ்வர் புஜாரா பற்றி இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக சமீப காலமாக டெஸ்ட் தொடரில் பல சாதனைகளைப் படைத்து அடுத்த டிராவிட் என்ற அளவிற்கு அனைவராலும் புகழப்பட்டவர் புஜாரா, இந்திய டெஸ்ட் அணியின் தூணாக விளங்கி வரும் செதேஷ்வர் புஜாரா பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஒரு மைல்கல்லை அடைய உள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜாரா, இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 போட்டிகளில் விளையாடினால் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
இது குறித்து பேசிய இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் புஜாராவின் சாதனைகள் சரியாக அங்கீகரிக்க படவில்லை என்று கூறினார்.
இந்திய அணிக்காக பல தொடர்களில் தனது நிதானமான மனநிலையில் தெளிவான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வெற்றிகளை பெற்று தந்தவர் புஜாரா என்று சச்சின் கூறினார், மேலும் தொடர்ந்து பேசிய சச்சின் என்னை பொறுத்தவரை புஜாராவின் சாதனைகள் மற்றும் திறமைகள் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறினார்.
சச்சின் உடைய பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை அடைய போகும் புஜாரா திறமையான வீரர் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சர்வதேச அளவில் இந்திய அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 7014 ரன்கள் பதிவு செய்துள்ளார், மேலும் அவரது சராசரி 44.39 என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ள புஜாரா இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் காப்பானாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை.