சஞ்சு சாம்சன் அதிரடி சாதனை.!! ராஜஸ்தான் ராயல்ஸ் மிரட்டல் வெற்றி..!! | rr captain samson record 2023

ஐபிஎல் 2023 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய சாதனை படைத்து அரங்கத்தை அதிர வைத்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 177 ரன்கள் பதிவு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
இந்நிலையில் அணியின் நிலையை மற்றும் வகையில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடினார். ராஜஸ்தான் அணியை வெற்றியின் அருகில் அழைத்து செல்லும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் பதிவு செய்து அசத்தினார்.
இதன்மூலம் ஐபிஎல் அரங்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற முக்கிய மைல்கல்லை அடைந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 115 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் 2 சதம் மற்றும் 16 அரைசதம் உட்பட 29.76 சராசரியுடன் 139.10 ஸ்டிரைக் ரேட்டில் 3006 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடைசியாக சிறப்பாக விளையாடிய சிம்ரன் ஹெட்மையர் 56(26) அரைசதம் பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஐபில் தொடரில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.