IND VS AUS TEST 2023 : தனி ஒருவராக போராடிய ரோஹித் சர்மா சதம் விளாசல்.! ரசிகர்கள் பாராட்டு..!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார், இந்திய அணியின் காப்பானாக ரோஹித் சர்மா செயல்பட்டார்
இந்திய அணி முதல் நாள் முடிவில் சிறப்பான பந்து வீச்சு மூலம் ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தது, அதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 77 ரன்கள் பதிவு செய்தது, அதன்பின் இரண்டாவது நாள் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி வீரர் டாட் மர்பி அஸ்வின், புஜாரா மற்றும் கோலி விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் சூர்யா குமார் யாதவும் வேகமாக பெவிலியன் திரும்ப தனி ஒருவனாக மறுமுனையில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் பொறுப்புடன் விளையாடினார்.
இந்திய அணி ஒருமுனையில் திணறிய நிலையில் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார், குறிப்பாக 171 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உட்பட 100 ரன்களை எட்டினார். இது சர்வதேச அளவில் ரோகித் சர்மா கேப்டனாக அடித்த முதல் சதம் ஆகும்,மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்த சதம் மூலம் மூன்று வடிவ தொடர்களிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தற்போதைய நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் பதிவு செய்து, 10 ரன்கள் முன்னிலையில் உள்ளது, மேலும் ரோஹித் சர்மா 103*(176) மற்றும் ஜடேஜா 12*(27) ரன்களில் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.