கடந்த ஆண்டுகளில் ஒரே தேதியில் ரோஹித் சர்மா அடித்த இரண்டு சதங்கள்..! இலங்கை தொடரிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட உள்ளார்கள்,இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது அதற்கு காரணம் இதே நாளில் ரோகித் சர்மா படைத்த சாதனைகள் தான்.
இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பெற்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கிறார்கள், அதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்த தேதியில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பெர்த்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 171*(163) ரன்கள் அடித்து அசத்தல் ஆட்டத்தை ரோஹித் சர்மா வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் 133(129) ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
ரோஹித் சர்மாவின் இந்த இரண்டு அதிரடி ஆட்டமும் இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே தேதியில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,எனவே இதே போல் இன்று இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மா உதவுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி 2-0 என்ற நிலையில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ,கே.எல்.ராகுல் ஆகியோர் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்து அதை நிறைவேற்று வாருங்கள் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.