இந்தியா vs நியூசிலாந்து : இந்தியாவின் பிளேயிங் லெவனில் ஏற்படவுள்ள மாற்றம்..?? ரோஹித் சர்மா அதிரடி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 20, 2023 & 12:30 [IST]

Share

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி திக்கி திணறி இறுதியில் வெற்றி பெற்றதால், 2வது ஒருநாள் போட்டியில் பிளேயிங் லெவனில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 349 ரன்களை இலக்காக நியூஸிலாந்து அணிக்கு அளித்தது, இருந்த போதிலும் இந்திய அணி செய்த  சில தவறுகளால் நியூசிலாந்து அணி அந்த இலக்கை அடையும் நிலைக்கு சென்றது.

இந்த போட்டியில் இரு அணிகளும் அதிரடியாக விளையாடியதால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எந்த தவறும் ஏற்படாதவாறு சில மாற்றங்களை செய்ய அணியின் கேப்டன் ரோஹித் முடிவெடுத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி நல்ல இலக்கை அடைய முடிந்தது, மற்ற முன்னணி வீரர்கள் தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார்கள்.

குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிசான் தங்களின் இடத்தை உறுதி படுத்த இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆகா வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இறுதி ஓவர் வீசி இந்திய அணியின் வெற்றிக்கு ஷர்துல் தாக்கூர் உதவினாலும்,அவருக்கு பதில் அணியின் மின்னல் வேக பௌலர் உம்ரன் மாலிக் இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியில் முழு மகிழ்ச்சி இல்லை என்று அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முன்பே தெரிவித்திருந்தார், எனவே அடுத்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டி புதிய மாற்றங்களை அவர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்க விருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் முழுவீச்சில் செயல்படுவார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.