இந்தியா vs இலங்கை : இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அசத்தல் திட்டம்..?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

இந்திய மற்றும் இலங்கை அணிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில்,முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது, இந்நிலையில் இன்று நடந்து கொண்டிருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் வகையில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்த காரியம் இணையத்தில் பரவி வருகிறது.
இன்று கொல்கத்தாவில் ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்த்த நிலையில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஸ்பின்னர் சாஹல் பதிலாக குலதீப் யாதவை களமிறக்கியுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-0 என்ற நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
கொல்கத்தா மைதானம் ஸ்பின் பவுலர்களுக்கு மிகவும் உதவும் என்பதால்,எதிர் அணி எதிர்பார்க்காத விதமாக ஸ்பின்னர் சாஹலுக்கு பதிலாக இடது கை சைனாமேன் குலதீப் யாதவை ஒரு திட்டத்துடன் களமிறக்கி உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அணி இந்த வருட இறுதியில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் கண்டிப்பாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஆகா வேண்டும் என்பதற்காக அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது