Representative Image.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்கள், குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து சர்வதேச ஒருநாள் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா பல ஒருநாள் போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சதம் அடிக்க முடியாமல் தொடர்ந்து கஷ்டப்பட்டு வந்தார்.இதனால் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது,இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக 3 வது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 30 வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் தனது பேட்டிங்கால் நியூசிலாந்து அணியின் பவுலர்களை மிரட்டிய ரோகித் சர்மா 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உட்பட 101(85) ரன்கள் அடித்து சர்வதேச அரங்கில் 42 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார், இதற்கு முன்னர் 2021 ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் சதம் அடித்த நிலையில் இத்தனை நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் அரங்கில் 30 வது சதம் அடித்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார்.ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(49 சதம்) முதலிடத்தில் , விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை அடையும் நோக்கில் தயாராகி வருகிறது, இந்த பயணத்தில் அணியின் முன்னணி வீரர்கள் பங்களிப்பு மிகவும் முக்கிய என்ற நிலையில் ரோஹித் சர்மா தனது பார்முக்கு திரும்பியுள்ளது நம்பிக்கை அளிப்பதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.