ரஞ்சி கோப்பையில் மிரட்டிய ரியான் பராக்..! இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை.!

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வரும் இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக், இந்த ஆண்டு தனது மிரட்டல் பார்மில் உள்ளார். சையத் முஷ்டாக் அலி ,விஜய் ஹசாரே கோப்பை,ரஞ்சி கோப்பை என அனைத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கலக்கியுள்ளார்.
இந்திய நாட்டின் உள்நாட்டுத் தொடர்களில் முக்கிய ஒன்றாக விளங்கும் ரஞ்சி கோப்பை தற்போது நடந்து வருகிறது,அதில் அசாம் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக்சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்த தொடரில் மூன்றாவது போட்டியில் ஹைதெராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தில் 28 பந்துகளில் 78 ரன்களை அடித்து விளாசியுள்ளார்,அதில் 8-பௌண்டரிகள் மற்றும் 6-சிக்ஸர்களும் அடங்கும்.
அந்த போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்களை அடித்த அவரது ஸ்ட்ரைக் ரேட் 278.57 ஆக பதிவானது.அதற்கு முன்னர் அதே போட்டியில் 20 ஓவர்கள் வீசி 48-ரன்களை வழங்கி 4-விக்கெட்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி கோப்பையில் அசாம் அணி தனது முதல் போட்டியில் சௌராஷ்டிரா எதிராக விளையாடியது,அதில் இரண்டு இன்னிங்சிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 171 ரன்களை அடித்து 4-விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த வருடம் முழுவதும் ரியான் பாரக் விளையாடிய அனைத்து தொடர்களிலும் மிகவும் சிறப்பாகப் பங்களிப்பை அளித்துள்ளார்,குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் அசாம் அணிக்காக 21-வயதான ரியான் பராக் 552 ரன்களை 9-போட்டிகளில் அடித்தார்.
அதேபோல் சையத் முஷ்டாக் அலி டி-20 தொடரிலும் நன்றாக விளையாடிய பராக் 7-போட்டிகளில் 253 ரன்களை அடித்தார் ,அந்த தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 165.35 ஆக பதிவானது.
இப்படி தொடந்து இந்த வருடம் முழுவதும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரியான் பராக்கை இந்திய அணியில் எடுக்கும்படி ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்திய அணியில் ரியான் பராக் போன்ற திறமையுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.