Representative Image.
இந்தியா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிசாப் பந்த் அண்மையில் கார் விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்,இப்பொழுது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரிசாப் பந்த் கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தார்,ஆனால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் இந்த ஜனவரியில் இலங்கைக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் டிசம்பர்-30 ஆம் தேதி தனது தாயாரை காண டெல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானார்.
அதன்பின் உடனடியாக டேராடூனில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.ரிசாப் பந்திக்கு முகத்திலும்,உடல்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
அவருக்கு எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை ஆனால் உடல் தசைகளில் காயம் ஏற்பட்டுள்ளது அது குணமாக கண்டிப்பாக குறைந்தது 6 மதங்கள் அவரது ஆகும் என்று மருத்துவ குழுவினர் கூறினார்கள்.
இப்பொழுது அண்மையில் வெளிவந்த தகவலின் படி ரிசாப் பந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்,எனவே அவர் 2-3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
ரிசாப் பந்த் முகத்தில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்யப்பட உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர், அதனால் அவரை அடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்திய அணியின் அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முக்கிய டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது,ஆனால் டெஸ்ட் அணியில் முக்கிய பேட்ஸ்மேனான ரிசாப் பந்த் தற்போதைய சூழ்நிலையில் இந்த தொடரில் மட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரிலும் கலந்து வாய்ப்பில்லை என்பது உறுதியானது.