உலகக்கோப்பை வென்ற முன்னாள் கேப்டனுக்கு திடீர் மாரடைப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 02, 2022 & 16:36 [IST]

Share

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இன்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் போட்டியின் போது, வர்ணனை செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் மதிய உணவின் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆஸ்திரேலியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், இப்போது புகழ்பெற்ற வர்ணனையாளராகவும், ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிடல்ஸின் பயிற்சியாளராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.