ஐ.பி.எல் 2023: பெங்களூர் அணியின் மாற்றமில்லாத பிளேயிங் -11..?? இந்த முறை கப் உறுதி ரசிகர்கள் நம்பிக்கை..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 26, 2022 & 16:23 [IST]

Share

ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்ற அணிகளைப் போல் பெரிதாக எந்த முக்கிய வீரர்களை வாங்கவில்லை,கடந்த ஆண்டு நடந்த தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்று வரை முன்னேறி அசத்தியது.

இந்நிலையில் அந்த தொடரில் இடப்பெற்ற வீரர்களை அப்படியே அணியில் தக்க வைத்துள்ளது.இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடரில்  ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாத பெங்களூர் அணி,கடந்த ஆண்டின் சிறப்பான பங்களிப்பின் மூலம் கண்டிப்பாக இந்தமுறை சாம்பியன் பட்டத்தை வென்று ஆகா வேண்டும் என்ற முடிவில் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை.

அதனால் ஏலத்தில் முக்கிய  வீரர்கள் யாரையும் வாங்க முன் வரவில்லை, மொத்தமாக 7-வீரர்களை மட்டுமே  பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தார்கள்.அதில் அதிகபட்சமாக 3.2 கோடிக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்  வில் ஜாக்ஸையும்,1.9 கோடிக்கு இங்கிலாந்து பௌலர் ரீஸ் டோப்லையும் வாங்கினார்கள்.

மேலும் ஏற்கனவே முன்னனி வீரர்கள் அடங்கிய அணியைப் பெங்களூரு நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளதால் புதிய வீரர்களுக்கு  பிளேயிங் 11-சில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமான உள்ளது.  

இந்நிலையில் கிரிக்கெட் வட்டாரங்களின் கூற்றுப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில்  தோராயமான பிளேயிங் 11-ல்  வீரர்கள் பட்டியல் வெளியானது.

ஆர்.சி.பி அணியின் தோராயமான பிளேயிங் 11 : ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்,ஷாபாஸ் அகமது,வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல்,ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

ஆர்.சி.பி  அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

விக்கெட்கீப்பர்கள் : பின் ஆலன்(நியூஸி),அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்.

பேட்ஸ்மேன்கள் : ஃபாஃப் டு பிளெசிஸ்(தென்.ஆ ),விராட் கோலி,ரஜத் படிதார்,சுயாஷ் பிரபுதேசாய்.

ஆல்ரவுண்டர்கள் : வனிந்து ஹசரங்க (இலங்கை),மஹிபால் லோம்ரோர்,வில் ஜாக்ஸ்(இங்கி),டேவிட் வில்லி(இங்கி), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸி), ஷாபாஸ் அஹமட், சோனு யாதவ், மனோஜ் பந்தகே.

பௌலர்கள் : ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸி), சித்தார்த் கவுல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்,கர்ண் ஷர்மா,அவினாஷ் சிங், ராஜன் குமார், ரீஸ் டாப்லி (இங்கி), ஹிமான்ஷு சர்மா.