ஐபிஎல் 2023 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சிறந்த பிளேயிங் 11 ஒரு பார்வை..!! | rcb best playing 11 for ipl 2023

ஐபிஎல் தொடரில் பல அதிரடி சாதனைகளை படைத்து சிறந்த வீரர்கள் படையை கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின், ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த பிளையிங் 11 குறித்து காண்போம்.
இந்திய மண்ணில் நடைபெறும் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றாக விளங்கும் ஐபிஎல் தொடரில் மிரட்டல் அணியாக வலம் வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கடந்த ஆண்டு கேப்டன் பாப் டு பிளெசிஸ் தலைமையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்று வரை முன்னேறி அசத்தியது.
அதன்பின் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவி கோப்பையை கைப்பற்ற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து அணிகளையும் சிதறடித்தது எனவே அந்த அணியை 2023 ஆம் தொடரை முன்னிட்டு அப்படியே பெங்களூர் நிர்வாகம் தக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கட்டாயம் பெங்களூர் அணி தங்கள் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஐபிஎல் 2023 தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சிறந்த பிளேயிங் 11 குறித்து காண்போம்.
பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டரை முன்னணி வீரர் விராட் கோலி வழிநடத்த அவருடன் சேர்ந்து கேப்டன் பாப் டு பிளெசிஸ் பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவர், அதன்பின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் அணிக்கு வலு சேர்க்க பவுலிங்கில் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து முகமது சிராஜ் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.இதன்மூலம் ஒரு சிறந்த பலம் வாய்ந்த ப்ளேயிங் லெவனுடன் பெங்களூர் அணி ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சிறப்பாக செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் 11 : பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோ மோர், தினேஷ் கார்த்திக் (வி.கீ.), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி : பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபு தேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், பின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரோர், முகமது சிராஜ், முகமது சிராஜ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, மைக்கேல் பிரேஸ்வெல், மனோஜ் பந்த் கே, ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.