Representative Image.
இந்தியாவின் நோக்கம்
ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ளது. இந்திய அணி கடைசியாக 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே 2023- உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி தயாராகி வருகிறது.
கடந்த நியூசிலாந்து தொடரில் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-0 என்ற நிலையில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் தான் கூறப்படுகிறது.
சூர்யாகுமார் தடுமாற்றம்
கடந்த மாதம் நடந்து முடிந்த டி -20 உலகக்கோப்பையில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். அவரின் பேட்டிங்கை ஒருநாள் தொடரில் காண விரும்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நியூசிலாந்து தொடரில் மூன்று போட்டிகளையும் சேர்த்து சூர்யகுமார் யாதவ் மொத்தமாக 44 ரன்களை மட்டும் தான் அடித்தார். அதிக பட்சமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் 34* அடித்து அட்டமிழக்காமல் இருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரியின் "அட்வைஸ்"
சூர்யாகுமார் யாதவின் இந்த சொதப்பல் ஆட்டத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒருநாள் போட்டியையும் டி-20 போட்டியாகக் கருதி விளையாடுவது தான் என்று இந்திய அணியின் முன்னால் வீரர் மற்றும் பயிற்சியாளரான "ரவி சாஸ்திரி" கூறுகிறார். மேலும் 20-ஓவர் போட்டிக்கும் 50-ஓவர் போட்டிக்கும்
மிகவும் மாறுபட்ட முறையில் ஒரு வீரரின் பேட்டிங் ஸ்டைல் இருக்க வேண்டும். ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை முதலில் களத்தில் அதிக பந்துகளை விளையாடவேண்டும் அதற்குப் பிறகு ரன்களை அடிக்கவேண்டும். அதாவது ஒருநாள் போட்டியில் பொறுமையாகக் களத்தில் இருக்கப் பழக வேண்டும் ஆட்டத்தின் போக்கிற்கேற்ப நாம் விளையாட வேண்டும் என்று அவர் கூறினார்.
மீண்டும் உதிக்குமா சூரியன்
அடுத்தாக இந்தியா பங்களாதேஷ் தொடரில் மூன்று ஒருநாளில் விளையாடவுள்ளது, அதில் சூர்யகுமார் யாதவ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி தனது பேட்டிங்கில் மாற்றம் செய்து ஒரு தொடரில் அவர் கலக்குவார் என்று ரசிகிர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். இந்தியாவில் நடக்கவிருக்கும் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல இவரது பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.