குஜராத் பவுலர் யாஷ் தயாளை சிதறடித்த கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் …!! ரஷீத் கான் கலக்கல்..!!

ஐபிஎல் 2023 தொடர் மிகவும் விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அசத்தல் ஆட்டம் அரங்கேறியது. குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட இளம் வீரர் ரஷீத் கான் மற்றும் கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் இருவரும் தான் மிரட்டலாக விளையாடி ஐபிஎல் அரங்கை அதிர வைத்தார்கள் என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் தொடரில் 13 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் முக்கிய சம்பவமாக பதிவானது. அதாவது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி 204 ரன்களை பதிவு செய்தது. அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி முன்னணி வீரர்கள் அசத்தலாக விளையாடி ரன்கள் குவித்தார்கள்.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், போட்டியின் போக்கை மாற்றி அமைக்கும் வகையில் குஜராத் அணி கேப்டன் ரஷித் கான் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கொல்கத்தா அணியின் முன்னணி வீரர்கள் ஆண்ட்ரே ரசல் 1(2) , சுனில் நரைன் 0(1) மற்றும் ஷர்டுல் தாகூர் 0(1) ஆகியோரின் விக்கெட்களை பெற்று குஜராத் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அதன்பின் கொல்கத்தா அணி சார்பில் களத்தில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ரிங்கு சிங் 48*(21) ரன்கள் பதிவு செய்து அசத்தினார், குறிப்பாக இறுதி ஓவரில் 29 ரன்கள் அடித்தால் கொல்கத்தா அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது ஜராத் பவுலர் யாஷ் தயாள் வீசிய பந்துகளை நாலா பக்கமும் சிதறடித்து தொடர்ந்து கடைசி 5 பந்தில் 5 சிக்ஸர்கள் அடித்து அணிக்கு மிரட்டல் வெற்றியை பெற்று தந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் 2023 அரங்கில் தோல்வியே சந்திக்காத குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் தோல்வியை தனது மிரட்டல் ஆட்டத்தின் மூலம் அளித்தார் ரிங்கு சிங் என்று கூறினால் மிகையில்லை. கொல்கத்தா அணியின் சிறப்பான வெற்றியை பெற்று தந்த ரிங்கு சிங், ஐபிஎல் அரங்கில் நாயகனாக அனைவராலும் பாராட்டப் பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.