Representative Image.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் சூழல் பந்து வீச்சாளர் ரஷீத் கான் தற்போது தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்.இந்நிலையில் டி20 தொடர்களில் ஒரு மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தது அசத்தியுள்ளார், அவரை கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.
ரஷீத் கான் தனது அதிரடியான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பான பங்களிப்பை பல ஆண்டுகளாக வழங்கி வந்த நிலையில், 24-வயது இளம் வீரர் ஆனா ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை பெற்று கடந்த உலக கோப்பை தொடரில் தனது அணியை வழிநடத்தினார்.
இந்நிலையில் உலகில் பல முன்னணி டி20 தொடர்களில் விளையாடி வரும் ரஷீத் கான் தனது அசத்தல் பவுலிங் மூலம் பல சாதனைகளை படைத்து உள்ளார்.தற்போது தென்னாபிரிக்காவின் டி20 லீக் தொடரில் எம்.ஐ.கேப் டவுன் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எம்.ஐ.கேப் டவுன் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் விளையாடிய ஒரு போட்டியில் தனது சூழலில் 3 விக்கெட்டுகளை பெற்றார். இந்த போட்டியில் எதிரணி வீரர் க்ளைட் ஃபார்ட்டின் விக்கெட் பெற்ற பொழுது டி20 தொடரில் 500 விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது வீரர் என்ற மிகப்பெரிய மைல் கல்லை அடைந்தார்.
இதுவரை இந்த சாதனை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டுவைன் பிராவோ 614 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார், இந்நிலையில் இந்த பட்டியலில் இணைந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரஷீத் கான் பெற்றார்.
ரஷீத் கான் இளம் வயதில் இந்த மிக பெரிய சாதனையை படைத்திருப்பதை பார்த்து உலகின் முன்னணி வீரர்கள் , கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் உலகில் இன்னும் மிகப்பெரிய இடத்திற்கு ரஷீத் கான் செல்வார் என்றும் கூறி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.